ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு நிறைவு… டிசம்பரில் ரிலீஸ்!

‘பிளாக்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவா அடுத்தடுத்த புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் புதிய படத்திற்கு ‘தகப்பன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து பின்னணி பணிகள் தொடங்கவுள்ள நிலையில், ‘தகப்பன்’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading