“கவர்ச்சி உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை மதிப்பிடாதீர்கள்” – ரைசா வில்சன் OPEN TALK!

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சன், அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலமாகவும் ரசிகர்களிடம் பிரபலமான இவர், தற்போது மைலோ இயக்கத்தில் உருவாகும் ‘நோவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வசனங்கள் இல்லாமல் உடல்மொழி மற்றும் பார்வை மூலம் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமூக வலைதளங்களில் ரைசா வில்சன் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்பாக அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக அவர் அணியும் கவர்ச்சியான உடைகள் குறித்து சிலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதற்கு ரைசா வில்சன் பதிலளித்துள்ளார்.

நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிவதை மட்டும் வைத்து அவர்களின் தன்மையையோ தரத்தையையோ மதிப்பிடும் அணுகுமுறை மாற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கவர்ச்சிக்கும் சில எல்லைகள் இருப்பதாகவும், அதனை நடிகைகள் நன்றாகவே அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாடுகளில் பிகினி உள்ளிட்ட உடைகளை அணிந்தாலும் அதற்காக நடிகைகளை விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் ரைசா கூறியுள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்ததால், சிலர் கவர்ச்சியானதாக கருதும் உடைகள் தனக்கு இயல்பானவை என்றும், உடைகளை மட்டுமே வைத்து குறை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading