ஹாலிவுட் படங்களுக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குநரின் பெயரைக் கேட்டாலே, எந்த யோசனையும் இல்லாமல் அவரது படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். அவரது இயக்கத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாதவே உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தி ஒடிஸி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் வெளியாகியுள்ள இப்படம், இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.
இந்திய படங்களுக்கு இணையாக ஹாலிவுட் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நேற்று (ஜூலை 17) வெளியான ‘தி ஒடிஸி’ திரைப்படம் உலகம் முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
