‘தி ஒடிசி’ மேக்கிங் வீடியோ வெளியீடு… நோலனின் பிரம்மாண்ட படைப்பின் புதிய அப்டேட்!

உலக சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுபவர் கிறிஸ்டோபர் நோலன். ‘தி டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘தி பிரெஸ்டீஜ்’, ‘ஓப்பன்ஹெய்மர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சிக்கலான திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் புதுமையான திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் நோலன் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.

தனது திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகத் துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக கிறிஸ்டோபர் நோலன் பெரும்பாலும் ஐமேக்ஸ் (IMAX) கேமராக்களை பயன்படுத்தி படமாக்கி வருகிறார். மேலும், கணினி கிராபிக்ஸ் (CGI) பயன்பாட்டை முடிந்தவரை தவிர்த்து, இயற்கையான மற்றும் தத்ரூபமான காட்சிகளை நேரடியாக உருவாக்குவதிலேயே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

தற்போது கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey)-யை இயக்கியுள்ளார். கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற ‘ஒடிசி’ காவியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், இதுவரை அறிவியல் புனைவு மற்றும் த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்திய நோலன், முதல் முறையாக புராணக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் பிரம்மாண்டம், ஐமேக்ஸ் கேமரா பயன்பாடு, காட்சிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் திரைப்படம் உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading