‘ஜனநாயகன்’ ரிலீஸால் ஒத்திவைக்கப்பட்ட ‘இம்மோர்டல்’… தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்… – ஜி.வி. பிரகாஷ்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘இம்மோர்டல்’ படத்தின் ரிலீஸ் தற்போது செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் ஜி.வி. பிரகாஷ், “தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்! அதுவும் ஒன் லாஸ்ட் டைம். ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘இம்மோர்டல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading