தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.
ஒரே இரவில் ரெயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த டார்க் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழிக்காரா’ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நிதி பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தாமதமான நிலையில், தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னை பிவிஆர் சத்யத்தில் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்ற நிலையில், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
—
