மிஷ்கின் செட்டில் மைக்குகளே அழுதன… ‘டிரெயின்’ விழாவில் நாசர் சுவாரஸ்ய பேச்சு!

சென்னையில் நடைபெற்ற மிஷ்கின் இயக்கிய ‘டிரெயின்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர், கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நாசர், “நான் பல படங்களில் நடித்திருந்தாலும், ‘டிரெயின்’ வித்தியாசமான அனுபவம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சியில் நடித்துள்ளேன். மிஷ்கின் எந்தக் கதையையும் முதலில் என்னிடம் படிக்கக் கொடுப்பார். இந்தப் படமும் அப்படித்தான். என் கல்லூரி நண்பர் யூகி சேதுவும் இதில் நடித்துள்ளார். மிஷ்கின் செட்டில் மிகவும் கடுமையாக பேசுவார். என்னிடம் அந்த மைக்குகளே அழுதன,” என்று நகைச்சுவையாக கூறினார்.

இதையடுத்து பேசிய கே.எஸ். ரவிக்குமார், “செட்டில் கோபப்படுவது நான்தான் என்று நினைத்தேன். ஆனால், என்னைவிட மிஷ்கினுக்கு கோபம் அதிகம் என்கிறார்கள். அதை நான் நேரில் பார்த்ததில்லை,” என்றார்.

மேலும், சென்னை நகரிலேயே ரயில் பெட்டி செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், தினமும் சிறந்த நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் முறையை மிஷ்கின் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேசிய பார்த்திபன், தனது ‘உள்ளே வெளியே 2’ படத்திற்கும் ஒளிப்பதிவாளர் பவுசியாவே பணியாற்ற உள்ளதாக அறிவித்தார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading