புதிய டிரெய்லருடன் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி?

முதல்வர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். அரசியல் மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் கலந்த இப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதலில் பொங்கல் வெளியீடாக எதிர்பார்க்கப்பட்ட இப்படம், பின்னர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியானது. ஆனால், தணிக்கை நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், சில காட்சிகளில் மாற்றங்கள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு ஜனநாயகன் ஏ சான்றிதழ் பெற்றதற்கான போஸ்டர்-ஐ படக்குழு வெளியிட்டது..

தற்போதைய தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 183 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், ரிலீஸ் தேதியுடன் புதிய டிரெய்லரும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading