‘பெயில்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு… காந்தி ஜெயந்தியில் வெளியாகும் சிவராஜ்குமார் படம்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தற்போது ‘ஜெயிலர் 2’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், இயக்குநர் பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெயில்’ திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதலில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் ‘பெயில்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading