சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து அக்ஷய் குமார் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 24 மணி நேரத்தை 8 மணி நேர வேலை, 8 மணி நேர குடும்பத்துடன் செலவிடுதல் அல்லது ஓய்வு, 8 மணி நேர தூக்கம் என சமநிலையாகப் பிரித்து வாழும் ‘8-8-8’ வாழ்க்கை முறையையே தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தினசரி வாழ்க்கையில் யோகா, மார்ஷியல் ஆர்ட்ஸ், நீச்சல், ஓட்டப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருவதாகவும், வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், வீட்டு உணவு போதுமான தண்ணீர் போதும் எனவும் கூறினார்.
Add a Comment
