‘தி ஒடிஸி’ மேக்கிங் வீடியோ நாளை வெளியீடு!

தி ஒடிஸி மூலம் புராண கதையில் நோலன் களமிறங்கியுள்ளார்.‌கிரேக்கப் புராணத்தில், டிரோஜன் போர் முடிவடைந்த பிறகு, இத்தாக்காவின் மன்னரான ‘ஒடிஸியஸ்’ தனது ராஜ்ஜியத்திற்கு திரும்புவதற்காக மேற்கொள்ளும் அபாயகரமான பயணமே இப்படத்தின் கதையாகும். இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்களான மெட் டாமன்,டாம் ஹாலண்ட், ஜெண்ட்யா, அண்ணா ஹாத்வே, எலியாட் பேஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.மாட் டேமன் ஒடிஸியஸாகவும், ஆன் ஹேத்வே அவரது மனைவி பெனிலோப்பாகவும் நடித்துள்ளனர். மகனாக டாம் ஹாலண்ட் நடித்துள்ளார். இந்நிலையில் தி ஓடிஸி (The Odyssey) திரைப்படத்தின் அல்லது தொடரின் தயாரிப்பு வீடியோ (Making Video) நாளை (ஜூலை 14) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.இதன் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading