மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ’ கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று (ஜூலை 10) படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே துல்கர் சல்மான் நடித்த ‘ஐயம் கேம்’ திரைப்படம் ஓணம் வெளியீடாக வரவுள்ள நிலையில், ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
