ஜூலை 24ல் வெளியாகும் ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படம்!

தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் ஜூலை 24 வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’யும் அதே நாளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரவி நம்புரி இயக்கியுள்ள இப்படத்தில் கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதையை சாய் ராஜேஷ் எழுதியுள்ள நிலையில், எஸ்கேஎன் தயாரித்துள்ளார்.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும், ‘ஜனநாயகன்’ மீது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுவதாலும், அதே நாளில் வெளியாகும் ‘சென்னை லவ் ஸ்டோரி’ ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது சவாலாக இருக்கும் என திரையுலகில் பேசப்படுகிறது. குறிப்பாக தெலுங்கு மாநிலங்களிலும் ‘ஜனநாயகன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூலை 24 பாக்ஸ் ஆபீஸ் போட்டி கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading