90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை சுகன்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். பாரதிராஜா அறிமுகப்படுத்திய சுகன்யா, கடந்த சில ஆண்டுகளாக தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக 2023-ஆம் ஆண்டு வெளியான ‘தீ இவன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஆமையும் முயலும்’ திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுகன்யா, தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘வரவு’ திரைப்படத்தில் டெய்சி என்ற கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்துள்ளார். இதற்கு முன்பு தமிழில் ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—
