வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம், அவர் இயக்கிய ‘வட சென்னை’ படத்தின் கதைக்களத்தின் காலக்கட்டத்தை தொடர்புடையதாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, நெல்சன் திலீப்குமார், விக்ராந்த், யோகி பாபு மற்றும் கமலேஷ் ஜெகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் மயிலை சிவகுமாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வி.கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகளும் இரவு நேரங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், படத்தின் அடுத்த ஷெட்யூலில் பகல் நேர காட்சிகளும் முக்கியமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ‘அரசன்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
