சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி. பிரகாஷ்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த திரைப்படம் சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளதுடன், நிமிஷ் ரவி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். நவின் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்தது. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இந்த மாதத்திலேயே வெளியாகும் என்று தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் முதல் பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading