உலகிலேயே மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சொகுசு பங்களாவை வைத்திருக்கிறார். மலையாள நடிகர் மோகன்லால் இந்த கட்டிடத்தில் 29வது மாடியில் ஒரு பெட்ரூம் கொண்ட அபார்ட்மெண்ட்டை தனது மனைவி சுசித்ராவின் பெயரில் வாங்கியுள்ளார்.இந்த வீட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 5 கோடி ரூபாய் ஆகும். மோகன்லாலுக்கு இது பெரிய தொகை இல்லை என்றாலும் ஒரு பெட்ரூமுள்ள சின்ன ஸ்டூடியோ வடிவிலான ஒரு வீட்டுக்கு மிகப்பெரிய விலையாகும். துபாய் மவுண்டன் கட்டிடம் மோகன்லாலுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதை பார்த்துக் கொண்டிருக்கும் படியான இந்த வீட்டை அவர் வாங்கி உள்ளார்.
Add a Comment
