தங்களை காண விரும்பிய சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. உதய்ப்பூரில் நடந்த அத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதன்பின் ஐதராபாத்தில் திரையுலகினருக்காக திருமண வரவேற்பு நடைபெற்றது. தங்களது ரசிகர்களுக்காகவும் ஐதராபாத்தில் விருந்து வைத்தனர். இந்நிலையில் திதி என்ற சிறுமி இரண்டு வாரங்களுக்கு முன்பு, ‘நாங்களும் உங்களுக்கு பிரண்ட்ஸ் தானே, எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.அந்த வீடியோவைப் பார்த்த விஜய் தேவரகொண்டா, அவரை தங்களது வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பதாக கமெண்ட் செய்திருந்தார். அந்த வீடியோவும், விஜய்யின் கமெண்ட்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. நேற்று அந்த சிறுமியை குடும்பத்தினருடன் அழைத்து தங்கள் வீட்டில் விருந்து வைத்துள்ளனர் விஜய் மற்றும் ராஷ்மிகா. அவர்களே சிறுமிக்கு உணவு பரிமாறி, அவருக்கு பரிசுகளையும் கொடுத்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading