ரீ ரிலீஸாகும் சத்யராஜ் – மணிவண்ணன் நடிப்பில் வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம்!

சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அமைதிப்படை’. இந்த திரைப்படத்தை இயக்கிய மணிவண்ணன், அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும், சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அரசியல் நையாண்டி வசனங்கள், மேடை பேச்சைத் தாண்டி நிஜ அரசியல் நிலையை வெளிப்படையாக எடுத்துக்காட்டியது. எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்ட ‘அமைதிப்படை’ திரைப்படம், காலத்தால் அழியாத சிறப்புமிக்க படைப்பாக திகழ்கிறது.

அண்மைக்காலமாக பழம்பெரும் திரைப்படங்கள் தொடர்ந்து மறுவெளியீடாக வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘அமைதிப்படை’ திரைப்படமும் மேம்படுத்தப்பட்ட 4k  தரத்தில் மீண்டும் வெளியிடப்படுகிறது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த திரைப்படத்தை நவீன ஒலி அமைப்புடன் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பாக, இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading