சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘4 இடியட்ஸ்’ திரைப்படம்!

‘அன்பே சிவம்’, ‘புதுப்பேட்டை’, ‘கோகுலத்தில் சீதை’, ‘உன்னை நினைத்து’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக பெயர் பெற்றது லக் ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். அந்த நிறுவனத்தை உருவாக்கிய கே.முரளிதரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்குப் பிறகு, அந்த நிறுவனம் நீண்ட காலமாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்போது கே.முரளிதரனின் மகன்களான எம். கோகுல் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் வத்ஸன் ஆகியோர் இணைந்து புதிய முயற்சியாக ‘4 இடியட்ஸ்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதன் மூலம் அந்த நிறுவனம் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் புகழ், பிரக்யா நயன், திடியன், இந்திரன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன் மற்றும் கும்கிக் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யு.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளராக சுபாஷ் முனி ரத்தினம் பணியாற்றியுள்ளார். பல திறமையான கலைஞர்கள் இணைந்திருப்பதால் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் பேசும்போது, இது தனது முதல் திரைப்படம் என்றும், டார்க் காமெடி வகையை மையமாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்து செயல்படும் நான்கு பேர், உண்மையில் முட்டாள்தனமான செயல்களில் சிக்கிக் கொள்வது தான் இந்த கதையின் மையம் என அவர் கூறினார்.

ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் செல்லும் அந்த நால்வரும் எதிர்பாராத விதமாக அங்கு சிக்கிக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பதே கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. முழுக் கதையும் பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடைபெறுகிறதானாலும், அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த படம் சிரிப்பையும் பொழுதுபோக்கையும் அளிப்பதுடன் ஒரு கருத்தையும் கொண்டிருக்கும். பார்வையாளர்கள் தங்கள் கவலைகளை மறந்து ரசிக்கும் வகையில் படம் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading