ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. இந்த படத்தை இயக்குநர் விஜய் ரங்கநாதன் கதை எழுதி இயக்கியுள்ளார். இதில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமிப்ரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதலும் திகிலும் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த டீசர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், ‘ஓ பட்டர்பிளை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் படம் திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
