மிகப்பெரிய சவாலை ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் எனக்கு கொடுத்தது – நடிகர் விஜய் சேதுபதி டாக்!

விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மராத்தி மொழி திரைப்படங்களை இயக்கியவர் என்ற அடையாளம் கொண்ட இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலெகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க மவுனப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நாளை திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “வார்த்தைகள் இல்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மவுனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய அனுபவம் கொண்ட படம் இது” என்று தெரிவித்துள்ளார்.  அதேபோல், நடிகை அதிதி ராவ் ஹைதாரி கூறுகையில், வார்த்தைகளை விட கண்களும், அவற்றின் உணர்வுகளுமே என்னை அதிகம் நெகிழ வைத்தன. மவுனமும், நுணுக்கமான உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று மிக அழகாக இந்த படத்தில் இணைந்துள்ளன” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading