மதுரையில் ரஜினி ரசிகரான அல்போன்ஸ் என்கிற ரஜினி சேகர் ஹோட்டல் கடை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். அங்கே பல வருடங்களாக இவர் பரோட்டாவை வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே வழங்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்தாலும் கூட இவர் தனது கடையை தேடி வந்து சாப்பிடும் சாதாரண மக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக இப்படி தொடர்ந்து குறைந்த விலையில் இந்த சேவையை செய்து வருகிறார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தகவல் கேள்விப்பட்டு ரஜினி சேகரை அவரது குடும்பத்துடன் சென்னைக்கு வரவழைத்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த் சேகர் பற்றி குறிப்பிடும்போது சிறந்த உள்ளம் கொண்டவர் என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
Add a Comment
