தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு வெளிவந்த படங்களில் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்து வெளிவந்த ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ படம் 15 நாட்களில் உலக அளவில் 358 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்ல தெலுங்கு பிராந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். சங்கராந்திக்கு வெளியான பிரபாஸின் பான் இந்தியா படமான ‘தி ராஜா சாப்’ படத்தை விடவும், மற்ற படங்களை விடவும் சிரஞ்சீவி படம் வசூலைக் குவித்து வருவது தெலுங்குத் திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
