கடந்த 2021ம் ஆண்டில் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘பேச்சுலர்’. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தபடம் சில விமர்சனங்களையும் சந்தித்தது.

தற்போது இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’18 மைல்ஸ் (தாரணா). இதன் முதல் பார்வையையும், முன்னோட்ட வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ளார்.
இது ஒரு காதல் படம். குறிப்பாக கப்பல் படையில் வேலை பார்க்கும் அதிகாரியாக அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மிர்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.