விஜய் சேதுபதியின் 96 மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தவிர்த்து, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான பல படங்கள் தோல்விகள் மற்றும் கலவையான விமர்சனங்களை சந்தித்தன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமே 60 கோடி ரூபாய் அளவுக்குத்தான் வசூல் செய்தது. இதுவரை விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே 100 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை.
சிறப்பான கதை மட்டுமின்றி, சிறப்பான மேக்கிங் உடன் கூடிய கன்டென்ட் தான் முக்கியம் என்பதை மகாராஜா படம் உணர்த்தியுள்ளது. நான் லீனியர் எடிட்டிங்கில் பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் வித்தியாசமான எடிட் கட்ஸ் உடன் ரசிகர்களை அசந்து போக வைத்த படமாக மகாராஜா படம் வெளியாகி, விஜய் சேதுபதிக்கு வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் இதுவரை 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து தியேட்டருக்கு ரசிகர்களை மகாராஜா வரவழைத்து வருகிறது. இந்த வாரம் கல்கி ரிலீஸ் ஆகும் வரை மகாராஜா வசூல் ராஜாவாக வலம் வரும் என தெரிகிறது.