Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஹீரோ டூ ஜீரோவான ஸ்ரீகாந்த்… இப்படி ஒரு சோதனைக்கு காரணம் இதுதானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீகாந்த், ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி பெண்களின் இதயத்தை வென்றார். அரவிந்த்சாமி, மாதவன், ஷாம் போன்ற நடிகர்களின் வரிசையில் வளர்ந்து வந்தார். ஆனால், சரியான கதை தேர்வு செய்ய தெரியாமல், பல சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டார்.

மணிரத்தினம் படத்தில் நடிப்பது ஒரு தீராத ஆசையாக இருந்தபோதிலும், வாய்ப்பு கிடைக்கவில்லை. மாதவன், சூர்யா, சித்தார்த் நடித்த ஆயுத எழுத்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை மறுத்தார்.மாதவனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான பரிமாணத்தை கொடுத்த படம் என்றால் அது ரன்.லிங்குசாமி இயக்கம் பெரிய ஹிட் அடித்த இந்த படத்தில் முதலில் நடிப்பதற்கு ஸ்ரீகாந்த் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஜீவா ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த படம் தான் டிஷ்யூம். இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க வாய்ப்பு வந்தது நடிகர் ஸ்ரீகாந்துக்கு தான்.

விஜய் ஆண்டனியை ஒரு சிறந்த நடிகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய படம் தான் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக கூட இன்று வரை இருக்கிறது. இந்த படத்திலும் முதலில் விஜய் ஆண்டனி கேரக்டரில் நடித்த ஸ்ரீகாந்த்திடம் தான் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயம் ரவியை பெண் ரசிகைகளிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தான்.

Srikanth at the Curtain Raiser of Chepauk Super Gillies

இந்த படத்தின் கதையும் முதலில் ஸ்ரீகாந்த் அவர் மறுத்த பிறகுதான் ரவி அதில் நடித்திருக்கிறார். படம் பெரிய அளவில் வெற்றி அடைய விட்டாலும் ஆர்யாவுக்கு எல்லா கேரக்டரும் செட் ஆகும் என்பதை நிரூபித்த படம் தான் நான் கடவுள்.இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் நடிக்கவேண்டியது ஸ்ரீகாந்த் தான். பெரும்பாலும் நடிகர்கள் தாங்கள் தவறவிட்ட படங்கள் பற்றி வெளியில் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் தன்னுடைய பெட்டியில் இந்த படங்களை அவர் தவற விட்டு விட்டதாக ஓபனாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News