பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த பேத்தி தியாவை பேரழகி என்றே கூறலாம். விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து சினிமா பக்கம் செல்லாதவர் அவரின் இரண்டாவது மகள் அனிதா தான். அனிதா டாக்டர் படித்து அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் தியா. தியாவும் அம்மாவைப் போலவே மருத்துவராகியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமார் குடும்ப புகைப்படத்தில் தியா இருந்தது தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. விஜயகுமார் குடும்பத்தில் இருந்து அடுத்த ஹீரோயின் தயாராக உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், தியா சினிமா பக்கம் செல்லாமல் விவாகம் செய்து கொண்டார். அவரின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தமிழ் திரையுலகம் கூடி இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தது.


தியா, டாக்டராக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன.