நடிகர் ஹரிஷ் கல்யாண், ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பிறகு நடித்த படம் ‘டீசல்’. ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவான இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அதுல்யா நாயகியாக நடிக்க, வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது பான் இந்திய அளவில் உருவாக்கப்பட்ட ‘டீசல்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் ஹரிஷ் கல்யாணின் வசனங்களும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.