புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் அவர் நடித்த ‘அனிமல்’, ‘புஷ்பா-2’, ‘சாவா’ போன்ற படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ஜோடியாக நடித்த ‘சிக்கந்தர்’ திரைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களோடு தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வியின் தாக்கமாக, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் ராஷ்மிகா முன்னதாக கமிட்டாகி இருந்தாலும், தற்போது அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு, வேறு ஒரு நடிகையுடன் பேசப்பட்டு வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியானது.
அதே நேரத்தில், ‘ஸ்பிரிட்’ படக்குழு ராஷ்மிகாவிடம் கால்சீட் கேட்டபோது, ஜூன் மாதம் வரை ஏற்கனவே பிற படங்களுக்கு கால்சீட் கொடுத்துள்ளேன் என அவர் கூறியதால், வேறு நடிகையைக் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதில் எந்த தகவல் உண்மையென தெளிவாக தெரியவில்லை.