Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘வேட்டையன்’ படத்தில் ‘சுவாதி’யாக களமிறங்கும் நடிகை அபிராமி! #Vettaiyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேட்டையன்” படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தில், ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” சமீபத்தில் வெளியானது, அது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வகையில், படக்குழு தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில், நடிகை அபிராமி ‘சுவாதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை அறிமுகம் செய்யும் வீடியோவையும் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. “வேட்டையன்” படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வெளியான பிரீவியூ காட்சிகள் ரசிகர்களை மிகுந்த கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News