Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வெள்ளிவிழா நாயகனோடு மோதும் படங்கள் இத்தனையா? நாளை வெளியாகிறது மோகனின் ஹரா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெள்ளிவிழா நாயகன் என்று புகழப்படும் நடிகர் மோகன் நடித்துள்ள “ஹரா” திரைப்படம் நாளை வெளியிடப்பட உள்ளது. விஜய் ஶ்ரீ இயக்கத்தில், மோகன், அனுமோல், வனிதா விஜயகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள “ஹரா” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியீடு ஆகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்த மோகன் தொடர்ந்து விஜய் டிவியின் “சூப்பர் சிங்கர்” மற்றும் பல யூடியூப் சேனல்களில் ப்ரோமோஷன் செய்து வந்தார். “ஹரா” படத்தைத் தொடர்ந்து, அவர் விஜய்யுடன் “கோட்” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள “இந்தியன் 2” திரைப்படம் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு வெளியீடு தேதி மாற்றப்பட்ட நிலையில், 28 ஆண்டுகள் முன்னர் வெளியான “இந்தியன்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. ரீ ரிலீஸான “கில்லி” படத்துக்கு கிடைத்த வரவேற்பு “இந்தியன்” படத்துக்கும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குகன் சேனை ஐயப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள “வெப்பன்” திரைப்படம் ஜூன் 7 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு நடிகர் சத்யராஜ் பல ப்ரோமோஷன்களை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த், ரகுமான், மற்றும் வாணி போஜன் நடித்துள்ள “அஞ்சாமை” திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இந்த சோஷியல் கிரைம் த்ரில்லர் படத்தில், நடிகர் ரகுமான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். “இறுகப் பற்று” படத்தை தயாரித்த எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

மேலும், இந்த வாரம் ஹாலிவுட் ரசிகர்களுக்காக வில் ஸ்மித் நடித்துள்ள “Bad Boys: Ride or Die” திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. பல படங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் ரசிகர்களை கவரும் என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Read more

Local News