Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வெளியானது ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவின் மாஸ் எண்ட்ரி வீடியோ! புகழ்பெற்ற கோவிலில் நடக்கும் தக் லைஃப் ஷூட்டிங்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படம் தான் ‘தக் லைப்’.இந்த படம் ‘ஆக்ஷன்’ படம் ஆகும்.இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலனாது.அதில் கமல் மற்றும் சிம்பு புதிய தோற்றத்தில் காணப்பட்டனர்.

இந்நிலையில் ‘தக்லைப்’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக ‘தக்லைப்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் சிம்புவின் கதாபாத்திரத்த தோற்ற வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News