Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வெற்றிகரமாக 50 நாட்களை கடந்த விஜய்யின் தி கோட் திரைப்படம்… #TheGreatestOfAllTime

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்த ‘தி கோட்’ படம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார்.

விஜயின் அரசியல் குறித்த அறிவிப்பின் பின்னர் வெளியானதால், இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படம் வெற்றி பெற்றது.

‘தி கோட்’ படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து, இம்மாதம் 3ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியது. தற்போது ‘தி கோட்’ படம் வெளியானது 50 நாள் ஆகி வெற்றி நடை போடுகிறது.இதைகொண்டாடும் வகையில் வெளியான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News