சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து மீண்டுவந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரியலில் நடித்திருக்கிறார், மேலும் தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் சமந்தா ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, கௌதம் மேனன் மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து இயக்கவிருக்கும் படத்திலும் சமந்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமந்தா சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். இப்போது அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் தனது உடலை ரப்பர் போல வளைத்து கவர்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கிவருகின்றனர்.