Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

விறுவிறுப்பாக நடக்கும் பிரமாண்டமான செட் பணிகள்… பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் ஐந்து சீசன்களைத் தொகுத்து வழங்குவது போல் கமலுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின. எனவே ஐந்து சீசன்கள் முடிவைடந்ததும் இனி கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது புது ஆங்கரா என்கிற பேச்சுகள் தானாகவே கிளம்பின.பிக் பாஸ் சீசன் 8 க்கான வேலைகளைத் தொடங்கி விட்டது விஜய் டிவி. பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிக் பாஸ் செட்டிலேயே நூறு நாளும் தங்கியிருந்து வேலை செய்யும் டீமில் பணிபுரிய ஆட்கள் தேவை என சில தினங்களுக்கு முன் விளம்பரம் வெளியானது நினைவிருக்கலாம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரிடமும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், தொகுப்பாளர் ஜாக்குலின், ஶ்ரீதர் மாஸ்டர் என பலரது பெயர்கள் இப்போதே சோசியல் மீடியாவில் அடிபடத் தொடங்கி விட்டன. இதனிடையே கடந்த வாரம் சேனல தரப்பிலிருந்து 8வது சீசன் குறித்து விவாதிக்க கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார்களாம்.

பிக் பாஸ் தமிழ் தொடங்கிய போது முதல் ஐந்து சீசன்களைத் தொகுத்து வழங்குவது போல் கமலுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்கிற ரீதியில் தகவல்கள் வெளியாகின. எனவே ஐந்து சீசன்கள் முடிவைடந்ததும் இனி கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது புது ஆங்கர் வருவாரா என்கிற பேச்சுகள் தானாகவே கிளம்பின. ஆனால் 6 மற்றும் 7வது சீசனையும் கமலே தொகுத்து வழங்கினார்.எனவே எட்டாவது சீசன் குறித்த பேச்சு எழுந்த போதும் வழக்கம் போல் ‘ஆங்கர் யாருப்பா’ என அலசத் தொடங்கி விட்டன சமூக ஊடகங்கள். இப்போது அந்த மாதிரியான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. கமல்தான் வரும் பிக் பாஸ் சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

கமலிடம் சேனல் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை என்னவென்றால் வரும் சீசன் எப்படி இருக்கும்., புரோமோ ஷூட் எப்போது வைத்துக் கொள்ளலாம், என்பன உள்ளிட்ட சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். அதேநேரம் புரோமோ ஷூட் தொடங்கும் நாள் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லைனுதான் தெரியுது. ஆகஸ்ட் முதல் வாரத்துல இருந்து பிக் பாஸ் வீடு அமைக்கும் பணி தொடங்கப்பட இருக்கறதா சொல்றாங்க. அதனால அநேகமா அதே முதல் வாரத்துலயே புரொமோ ஷூட்டிங் தொடங்கினாலும் தொடங்கலாம். அப்படி நடந்தா ஆக்ஸ்ட் 15 வாக்கில் நிகழ்ச்சி குறித்து ஃபர்ஸ்ட் லுக் மாதிரி ஏதாவது ரிலீஸ் ஆகலாம்’ என்றவாறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News