Tuesday, September 17, 2024

விரைவில் திரைக்கு வரவுள்ள மழை பிடிக்காத மனிதன்… விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தனது படங்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார். தனது சொந்த தயாரிப்புகள் மட்டுமின்றி பிற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கத்தில் நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாராகியுள்ள “மழை பிடிக்காத மனிதன்” படத்தைப் பற்றி, அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட்-ஐ பகிர்ந்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான அவரது “ரோமியோ” படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன் வசூலும் சிறப்பாக இருந்தது. அடுத்ததாக, விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் திரைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் குறித்தும் அவர் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். டீசர் வரும் 29-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், படத்தின் வெளியீட்டிற்கு அருகில் இருப்பதால் தொடர்ந்து புதுப்பிப்புகளை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேகா ஆகாஷ் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை எழுதி இயக்கியுள்ள விஜய் மில்டன், ஆக்ஷன் மற்றும் கமர்சியல் வகையில் உருவாக்கியுள்ளார். டாமன் மற்றும் டையு பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News