Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

வித்தியாசமான டாஸ்க்… விறுவிறுப்பாக நகருமா இன்றைய தினம்? #BiggBoss8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக, முந்தைய சீசன்களைவிட இந்த சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ள இந்த சீசனில், “ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு” என்ற டேக் லைன் உடன், பல புதிய விதிமுறைகள் மற்றும் புதுமைகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடங்கிய தினம் முதல் இது மிகவும் சுவாரஸ்யமாகவும், தீவிரமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் பிக்பாஸ் சீசன் 8 தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

சீசன் தொடங்கிய நாளிலிருந்து பல புதிய டாஸ்க்குகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கி வருகிறார். அந்த அண்மையில், இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் இன்னும் சற்று முன்பு மூன்றாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு பஞ்ச நட்சத்திர ஹோட்டலாக மாறியுள்ளது. இதில் இரண்டு அணிகள் உள்ளன – ஒன்று ஹோட்டல் பணியாளர்களாகவும் மற்றொன்று வாடிக்கையாளர்களாகவும். விதிமுறைகளின் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் கேட்பதையெல்லாம் பணியாளர்கள் செய்து தர வேண்டும்.

இதில், சில போட்டியாளர்கள் வித்தியாசமான உடைகளில் பணியாளர்களாக உள்ளனர். ரஞ்சித் மற்றும் முத்துக் குமார் கணவன் மனைவியாக ஹோட்டலில் தங்கி வருகின்றனர். பெண்கள் அணியில் உள்ள பலர் ஹோட்டல் பணியாளர்களாக உள்ளனர். சத்யா, தீபக் மற்றும் அருண் போன்றவர்கள் ஹோட்டலில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் கேட்கும் அனைத்தையும் பணியாளர்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த டாஸ்க் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News