மும்பையை சொந்த ஊராக கொண்டவர் மிருனள் தாக்கூர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் மராத்தி பேசும் குடும்பத்தில் வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும்போது இவர் நடிக்கத் தொடங்கிவிட்டார். டிவி பக்கம் போய் சில சீரியல்களில் நடித்தார்.


அப்படியே சினிமாவில் நுழைந்து மராத்தி படங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி சினிமா பக்கம் போனார். சினிமாவில் நுழைந்து 8 வருடங்கள் கழித்தே தெலுங்கு சினிமா பக்கம் போனார். துல்கர் சால்மானுக்கு ஜோடியாக மிருனள் நடித்த சீதா ராமன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.


பிரபாஸ், கமல், அமிதாப்பச்சன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியான கல்கி படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் மிருனளுடன் நடிக்க ஆசைப்பட்டு வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அவரை கேட்டனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.


ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை துவம்சம் செய்து வருகிறார். இந்நிலையில், விதவிதமான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீடாக அமைந்திருக்கிறது.