Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்… வெளியான முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் ஒரு மாத காலம் நடைபெறும் எனவும், பின்னர் ஐதராபாத்தில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித் குமார் சில நாட்களுக்கு முன் அஜர்பைஜான் புறப்பட்டார். இப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. முன்னதாக தடம் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இன்னும் ஒரு மாதம் ஆகும் நிலையில், அஜீத் அசர்பைஜானில் இருந்து இப்படத்தின் மொத்த படபிடிப்பிலும் நடித்து முடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சில நாட்கள் அவர் தன்னுடைய சொந்த வேலைகளுக்காக சென்னை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூலை மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அஜித்தின் துணிவு படம் வெளியானு 18 மாதங்கள் கழிந்தும் அவரது அடுத்த படம் வெளியீடு குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியீடுக்கு தயாராகி வருவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களிடம் அஜித் கதைகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News