Saturday, September 14, 2024

விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் கோட் அப்டேட் கொடுத்த சினேகா… குதூகலத்தில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார்.மீனாட்சி சவுத்ரி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சினேகா, “கோட்” படத்திற்கான கேள்விக்கு அளித்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

2003-ஆம் ஆண்டு செல்வபாரதி இயக்கத்தில் வெளியான “வசீகரா” படத்தில் விஜய் மற்றும் சினேகா இணைந்து நடித்தனர். அந்த படம் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக ரசிகர்களை பெரிதும் மகிழச்சியடைய வைத்தது. அந்த படத்தின் பாடல்களும், விஜய் மற்றும் சினேகாவின் ஜோடிக்கான கெமிஸ்ட்ரியும் நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன்பின் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சினேகா, விஜய்யுடன் மீண்டும் “கோட்” படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

விஜய்யுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் முதிய விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினேகா, “கோட்” படத்தில் முழுக்க தளபதியுடன் இருப்பேன் என்றும் இன்னும் ஒரு நாள் தனக்கான ஷூட்டிங் பாக்கி உள்ளது என்றும், ரொம்பவே மகிழ்ச்சியாய் இருக்கிறேன், “கோட்” படம் நிச்சயமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News