மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘டிரெயின்’. இப்படத்தை தாணு தயாரிக்கிறார், மேலும் ஐரா தயானந்த் என்ற புதுமுகம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் புதிய அப்டேட்கள் வருமாறு, இப்படம் முழுக்க முழுக்க ரயிலில் நடக்கிறது. மிஷ்கின் தனது ரயில் பயண அனுபவங்களை கொண்டு இப்படத்தை இயக்கி உள்ளார். முழு படப்பிடிப்பும் ரயிலில் நடைபெற்றது. இதற்காக சில கோடிகள் செலவில் ரயில் செட் போட்டு அதில் படமாக்கப்பட்டுள்ளது, மேலும் ரயிலின் உட்புற காட்சிகளை படமாக்க ஜெர்மனியிலிருந்து நவீன கேமரா வரவழைக்கப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061805-682x1024.jpg)
இப்படத்தில், விஜய் சேதுபதி ரயிலில் பயணம் செய்யும் ஒரு பயணி, அவர் மற்ற பயணிகளுடன் உரையாடி, அவர்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பதே கதையின் மையம். விஜய் சேதுபதி நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர் சந்திரபாபு. வில்லனாக நாசர் நடித்துள்ளார், மேலும் ஒரு 5 நிமிட காட்சியில் நாசர் மிக அற்புதமாக நடித்துள்ளார். கண்ட்ரோல் ரூம் பகுதியில் நரேன், சம்பத், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061806-768x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061804.jpg)
சிங்கம் புலி, சின்னப்பொண்ணு, ரேச்சல், பிரீத்தி, பிக்பாஸ் ஜனனி, யூகி சேது உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் மூன்று சண்டை காட்சிகள் உள்ளன, இதில் வியட்நாமிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் அழைத்து வரப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திbற்கு மிஷ்கினே இசையமைக்கிறார், பெண் ஒளிப்பதிவாளர் பவுசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்துள்ளார்.