நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’சக்தித் திருமகன்’. விரைவில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படமாகும். தற்போது சக்தித் திருமகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘அருவி’, ப’வாழ்’ ஆகிய படங்களின் இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் வாகை சந்திரசேகர், த்ருப்டி ரவீந்திரா, சுனில் க்ரிபலானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ’காதல் ஓவியம்’ திரைப்பட நடிகர் கண்ணன் நடித்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள சக்தித் திருமகன் டீசரில், மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் பண மோசடி செய்தவனை தேடும் கதையாக ஆரம்பமாகிறது. அரசியல்வாதிகளில் இருந்து பலரையும் மோசடி செய்து ஏமாற்றியுள்ளதாகவும் வரலாற்றிலயே இப்படியான மோசடியை யாரும் பார்த்ததில்லை என டீசர் செல்கிறது, இந்த படத்தில் கிட்டு எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் என தெரிகிறது. மிகப்பெரிய பண மோசடி, அரசியல் என மிக சுவாரசியமாக டீசராக இது அமைந்துள்ளது.