Tuesday, November 19, 2024

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்… அடுத்தடுத்தென படங்களில் ஒரே பிஸி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் நடித்த ‘ரோமியோ’ திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. அதன்பின், விஜய் மில்டன் இயக்கத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

தற்போது, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

படத்தை குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும். செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News