Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய்யின் ‘தி கோட்’ ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ( தி கோட் ). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. கோட் திரைப்படம் குறித்து தினமும் ஒரு புதிய தகவல் வெளியாகி வருகிறது. இந்தப் படம் திரைப்பட, ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில்நுட்பங்களில் வெளியிடப்படவுள்ளது. இப்போது, படத்தின் டிரைலர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, “படத்தின் மிக பிரமாண்டமான டிரைலர் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். டிரைலர் குறித்த தகவல் நாளை வெளியாகும்,” என்று தெரிவித்திருந்தார்.தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் நாளை (13ஆகஸ்ட்) மாலை 6 மணிக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News