
தி கோட் படத்தில் விஜயகாந்த் அவர்களை நினைவூட்டும் விதமாக விஜய் உடன் சேர்த்து வைத்து AI டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் க்கு சில காட்சிகள் கொடுத்து அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.இதேபோல் இளையராஜாவின் மகள் பவதாரணியை கௌரவிக்கும் விதமாக அவருடைய சொந்த குரலில் AI தொழில்நுட்பத்துடன் ஒரு மெல்லடி பாடலை உருவாக்க கோட் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
