Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

வாவ் ராஷி கன்னா சேலையில இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே… ட்ரெண்டிங் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஷி கன்னா 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ‘மனம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். பின் கதாநாயகியாக ‘ஊஹாலு குடகுசலதே’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதைப் பெற்றார்.2017 ஆம் ஆண்டு ‘வில்லன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா நடித்த ‘இமைக்க நொடிகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பிறகு, ‘அடங்க மறு’, ‘அயோக்கிய’, ‘ஷைத்தான் க பச்சன்’ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழிலும் முன்னணி நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார்.சினிமாவைத் தவிர சமூக வலைதளங்களிலும் ராஷி கன்னா மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இப்போது அவர் வெளியிட்ட சேலை அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு அவர் தலைப்பிட்டுள்ளார்: “இந்த இடத்தில் என் பெயரை விட என் முகம் தான் அதிகம் தெரியும். ‘இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான முகம்’ விருதை எனக்கு வழங்கியதற்கு நன்றி @sakalmedia என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News