பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இதில் பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, தலைவாசல் விஜய், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜோஸ் பிராங்க்ளின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை நகரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதையால், இப்படத்திற்கு ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் செப்டம்பர் 26-ந்தேதி திரைக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு, படத்தின் விழாவில் பரத் அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் தாண்டி விட்டோம். திறமை இருந்தால் வெற்றி பெறலாம். பேராசை எனக்கு எதிலும் இல்லை,” என்றார்.