பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஃபயர் என்ற படத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் பாலாஜி முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் ஆரம்பத்தில் மாடலிங் வாய்ப்பு தருவதாக சொல்லி வேறு படம் எடுக்க என்னை தயார் செய்தார்கள். மாடலிங் வாய்ப்பு கேட்கும் சில இடங்களில் வேறு ஒரு விஷயத்தை என்னிடம் எதிர்பார்த்தார்கள். ஓப்பனாகவும் கேட்டார்கள். அதை இப்போது நான் இங்கே சொல்ல முடியாது. எனக்கு பின்னாடி பேசியவர்களுக்கும், தூரோகம் செய்தவர்களுக்கும் என்னுடய அடுத்த படம் தான் பதில். நான் வளரக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நான் இப்படியே இருக்கமாட்டேன். எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றி பெறுவேன்’ என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டால் ஒரு கோடி கிடைக்கும் என நினைத்து கலந்து கொண்டேன். ஆனால், எனக்கு அவர்கள் 45 லட்சம் தான் சம்பளமாக தந்தார்கள் என்றும் அந்த நிகழ்ச்சி மேடையிலேயே பாலாஜி முருகதாஸ் ஓப்பனாக கூறியுள்ளார்.
