கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள “ரெட்ரோ” படத்தைத் தொடர்ந்து, சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் சூர்யா 45 ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு, வெற்றி மாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட இந்தப் படம், சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படம், சி. சு. செல்லப்பா எழுதிய “வாடிவாசல்” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதே நேரத்தில், “வாடிவாசல்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா லட்சுமி, “ஜகமே தந்திரம்,” “கட்டா குஸ்தி,” “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.